அ.தி.மு.க.வினரின் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக் கேட்கபதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.
செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து தமிழக உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் மீது அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துரை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இதற்காக, இஸ்ரேலில் இருந்து ரூபாய் 40 கோடிக்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் வியூகங்களை தினமும் தமிழக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தும் நோக்கில் செல்போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது.
உளவுத்துறையின் நியாயமற்ற செயல்பாடு நேர்மையான தேர்தல் என்ற நோக்கத்தையே சிதைக்கிறது. உளவுத்துறையின் நடவடிக்கை அரசமைப்புக்கு எதிரானது; கருத்து உரிமை சுதந்திரத்தைப் பறிக்கிறது” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.