வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 17- ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் ஏப்ரல் 19- ஆம் தேதி வரை உள்ள கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தொகுதி சாராத கட்சி நிர்வாகிகள் வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு அந்த தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் வேட்பாளர்கள் பங்கேற்கக் கூடாது, தேர்தல் விவகாரங்களை சமூக வலைத்தளம் மூலம் மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது, இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திரையரங்குகள் வாயிலாக பரப்புரை செய்யக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நாளுக்கான விதிகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.