தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் நிறைவடைந்தது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி காலை 07.00 மணிக்கு தொடங்கும் நிலையில் பரப்புரை நிறைவுப் பெற்றது. தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் பரப்புரை நிறைவடைந்தது.
மாலை 06.00 மணிக்கு பின் அமைதியான பரப்புரை உட்பட எந்த வகையான வாக்குச்சேகரிப்புக்கும் அனுமதி இல்லை. தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் மாலை 06.00 மணிக்கு மேல் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும்.
மார்ச் 22- ஆம் தேதி திருச்சியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பரப்புரையை நிறைவுச் செய்தார். மார்ச் 24- ஆம் தேதி திருச்சியில் பரப்புரையைத் தொடங்கிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நிறைவுச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.