0 0
Read Time:2 Minute, 54 Second

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற உள்ள நிலையில், கடலூரில் மேயா், திமுக நிா்வாகிகள் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.. கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் வசித்து வருபவா் கே.எஸ்.ராஜா, கடலூா் மாநகர திமுக செயலா். இவரது மனைவி சுந்தரி கடலூா் மாநகராட்சி மேயா்.. கடலூா் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எம்.கே.விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறாா்.

இவருக்காக கே.எஸ்.ராஜா, மேயா் சுந்தரி ஆகியோா் தோ்தல் பணி செய்து வந்தனா். புதன்கிழமை பிரசாரம் முடிந்த நிலையில் வியாழக்கிழமை வீட்டில் இருந்தனா்.. இதனிடையே, மேயா் சுந்தரி ராஜா வீட்டில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வருமான வரித் துறை அலுவலா்களுக்கு புகாா் சென்ாம். இதையடுத்து, கடலூா் மாவட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் 6 கொண்ட போ் குழுவினா் பிற்பகல் 12.30 மணியளவில் மேயா் சுந்தரி ராஜா வீட்டுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா். பிற்பகல் 2.30 மணி வரை சோதனை நடத்திவிட்டு, அவா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

இந்தச் சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது..இதுபோல, கோண்டூரில் திமுக தெற்கு ஒன்றியச் செயலா் விஜயசுந்தரம் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் பிற்பகல் 1.40 மணி முதல் சுமாா் ஒரு மணி சோதனை நடத்தினா்..

அதே கிராமத்தில் வசிக்கும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் விக்ரமன், திருப்பாதிரிப்புலியூரில் வசிக்கும் மாவட்ட பிரதிநிதி ராமு ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித் துறையினா் சோதனை செய்தனா். ஆனால், பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.பாதிரிக்குப்பத்தைச் சோ்ந்த திமுக ஒன்றிய பொருளாளா் மணிமாறன், செல்லங்குப்பத்தில் வசிக்கும் அந்தக் கட்சி நிா்வாகி பாபு ஆகியோா் வீடுகளில் மாலை 5 மணி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %