மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!
தமிழ்நாட்டில் மாலை 5 மணி வரை 63.20% வாக்குகள் பதிவாகின.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாலை 5 மணி வரை 63.20% வாக்கு பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 67.53% பதிவாகி உள்ளன. தொகுதிவாரியாக வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:
தொகுதி சதவீதம்
தர்மபுரி -67.52 %
கள்ளக்குறிச்சி -67.23%
நாமக்கல் -67.37%
ஆரணி -67.34%
கரூர் -66.91%
பெரம்பலூர் -66.56%
சேலம் -65.86%
விழுப்புரம் -64.83%
விருதுநகர் -63.85%
ஈரோடு -64.50%
சிதம்பரம் -55.23%
திண்டுக்கல் -64.34%
அரக்கோணம் -65.61%
கிருஷ்ணகிரி -64.65%
திருவண்ணாமலை -65.91%
நாகப்பட்டினம் -64.21%
பொள்ளாச்சி -63.53%
வேலூர் -65.12%
தேனி – 63.41%
திருப்பூர் -61.43%
தஞ்சாவூர் -63.00%
மயிலாடுதுறை -63.77%
கடலூர் -64.10%
கன்னியாகுமரி -62.82%
சிவகங்கை -62.50%
தென்காசி -63.10%
நீலகிரி -63.88%
திருவள்ளூர் -61.59%
திருச்சிராப்பள்ளி –62.30%
ராமநாதபுரம் -63.02%
கோயம்புத்தூர் -61.45%
காஞ்சிபுரம் -61.74%
தூத்துக்குடி -63.03%
திருநெல்வேலி –61.29%
ஸ்ரீபெரும்புதூர் -59.82%
மதுரை -60.00%
சென்னை வடக்கு -59.16%
சென்னை தெற்கு -57.04%
சென்னை சென்ட்ரல் -57.25%
மொத்தம் – 63.20%