0 0
Read Time:1 Minute, 44 Second

மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூரில் உள்ள பரிமளரெங்கநாதர் கோயில் குடமுழுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்டோரும், திரளான பக்தர்களும் பங்கேற்றனர். குடமுழுக்கின் போது ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

அதேபோல், சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற 100 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மஹா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது. வெண்ணந்தூர், அத்தனூர், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களும் என 2,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்கவும், பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கவும், கோயிலின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %