“பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதே தண்டனையாகிவிட்டது” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
“மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாகிவிட்டது. ரயிலில் பொதுப்பெட்டிகளை குறைத்து, எலைட் ரயில்களை மட்டுமே ஊக்குவிக்கும் மோடி ஆட்சியில் அனைத்து தரப்பு பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். பணம் கொடுத்து டிக்கெட் பெற்றாலும் அவர்களால் இருக்கைகளில் அமர்ந்து செல்ல முடிவதில்லை.
नरेंद्र मोदी के राज में ‘रेल का सफर’ सज़ा बन गया है!
— Rahul Gandhi (@RahulGandhi) April 21, 2024
आम आदमी की ट्रेनों से जनरल डिब्बे कम कर सिर्फ ‘एलीट ट्रेनों’ का प्रचार कर रही मोदी सरकार में हर वर्ग का यात्री प्रताड़ित हो रहा है।
लोग कन्फर्म टिकट लेकर भी अपनी सीट पर चैन से बैठ नहीं पा रहे, आम आदमी ज़मीन पर और टॉयलेट में… pic.twitter.com/BYLWPB7j37
சாமானிய மக்கள் தரையிலும், கழிவறையிலும் அமர்ந்து பயணம் செய்கின்றனர். ரயில்வே துறையை பலவீனப்படுத்தி அதை திறனற்றது என நிரூபித்து தனது நண்பர்களுக்கு விற்கப்பார்க்கிறது இந்த பாஜக அரசு. சாமானியர்களின் பயணத்தைக் காப்பாற்ற ரயில்வே துறையை அழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.