தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9.30 மணியளவில் வெளியிடப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 2-இல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.
தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவா்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதையடுத்து, இணையதளங்களிலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என பள்ளி கல்விதுறை, சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://www.dge.tn.gov.in மற்றும் http://www.tnresults.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என பள்ளி கல்விதுறை, சார்பில் அறிவிக்கப்ப