தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 7 கட்டங்களாக தேர்தல்
வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.அப்போது பேருந்தில் பயணித்த மக்களிடம், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்களை வழங்கி, அதனை ராகுல் காந்தி விளக்கிக் கூறினார். மேலும், தெலங்கானாவில் நடைமுறையில் இருக்கும் இலவச பேருந்து பயண திட்டம் குறித்தும் மக்களிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.