0 0
Read Time:2 Minute, 19 Second

நாமக்கல் விவேகானந்தா கல்வி குழுமத்தின் 18 கல்லூரிகளிலும், தாளாளர் கருணாநிதி தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் விவேகானந்தா கல்வி குழுமத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி என 18க்கும் மேற்பட்ட கல்லூரிகளை உள்ளடக்கியது.

இந்த நிலையில், சேலம் மற்றும் கோவை மண்டலத்தைச் சேர்ந்த 10 வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நேரத்தில் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனையால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் வாக்குகள் பதிவாகியுள்ள வாக்கு பெட்டிகள் அனைத்தும் இந்த கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதியின் இல்லங்களிலும், கல்லூரிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி, மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், மக்களவை முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரையின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %