சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் 1994-96 ஆண்டு பொருளியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி அண்ணாமலை பல்கலைக்கழகம், பொருளியல் துறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் B.மாதவன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்களும், தற்போதைய பேராசிரியர்களுமான முனைவர் S. பிச்சைபிள்ளை, முனைவர் சோலை. பொன்னரசு, முனைவர் S. குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவி திருமதி S. சுதா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவர்கள் தொடர்பு இணை இயக்குனர் பேராசிரியர் முனைவர் K. பத்மநாபன் அவர்கள் கலந்து கொண்டு தனது சிறப்புரையில் பல்கலைக்கழக வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்கினை பற்றி விவரித்தார். தொலைதூர கல்வி இயக்க முன்னாள் இயக்குனர் பேராசிரியர் M. ஆறுமுகம், முன்னாள் கலைபுலத் தலைவர் பேராசிரியர் E. செல்வராசன், பேராசிரியர் நடராஜன் ஆகியோர் முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.
பேராசிரியர் பெருமக்களுக்கு பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசு வழங்கியும் கவுரவபடுத்தினர். பின்பு 36மாணவர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து, ஒவ்வொருவரும் கடந்த கால நினைவுகளையும், தற்போதைய குடும்ப நிலை ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவர்கள் முருகன், அய்யன்துரை, JKP (எ )கலியபெருமாள், தங்கப்பன், தங்கவேல் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். அனைவரும் தங்கள் குடும்பத்தோடு சந்தித்து குரூப் போட்டோ எடுத்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இறந்து போன பேராசிரியர்கள், தங்களுடன் கல்வி பயின்று இறந்து போன நான்கு நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்து நிகழ்ச்சியை தொடங்கினர் என்பது குறிப்பிடதக்கது.
இறுதியாக முன்னாள் மாணவர் பிரபாகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி