சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை வடபழனி சென்னை MYM பைசல் மஹால் மற்றும் மக்கள் மருந்தகம் சிதம்பரம் இவைகள் அனைத்தும் இணைந்து 26.05.2024 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சிதம்பரத்தில் காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை இலவச இருதய பரிசோதனை சிறப்பு முகாம் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Dr. V. நடனசபாபதி வரவேற்புரை நிகழ்த்தியும், சாசன தலைவர் முன்னனாள் துணை ஆளுநருமான Dr. P. முஹம்மது யாசின், சாசன செயலாளரும் முன்னாள் துணை ஆளுநருமான Dr. M. தீபக்குமார், மற்றும் சிதம்பரம் மக்கள் மருந்தகத்தின் உரிமையாளர்கள் நந்தகுமார் மற்றும் N.கேசவன் முன்னிலை வகித்தும் முகாமினை முன்னாள் மாவட்ட ஆளுநர் AKS. S. பாலாஜி துவக்கி வைத்து வாழ்த்துறை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் சீர்காழி பரஞ்ஜோதி அணிவணிக M. உரிமையாளர் பழனியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மேலும் காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் கலந்து கொண்டு முகாமின் நோக்கத்தை பற்றியும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினார்கள். முகாமின் சிறப்பு பற்றி இந்தியன் வங்கியின் முன்னாள் இயக்குனர் D. பாலசந்தர் வாழ்த்துறை வழங்கினார். இம்முகாமில் மருத்துவர்களோடு சிதம்பரம் ஆரோக்கிய அன்னை பாரா மெடிக்கலின் 20 க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு மருந்துவ சேவைகள் புரிந்ததோடு 400 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பயன்பெற்றார்கள்.
இவ்விழாவிற்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் மூத்த உறுப்பினர் A. விஸ்வநாதன, P. பன்னாலால் ஜெயின் முன்னாள் தலைவர்கள் G. சீனுவாசன் P.இராஜசேகரன் மற்றும் பொறியாளர்கள் K. புகழேந்தி, P. பழனியப்பன், G. குமரவேல், N. கோவிந்தராஜன் சங்கத்தின் உறுப்பினர்கள் வழக்கறிஞர் M. D. ஜெயபாண்டியன் L. ஜினேந்திரகுமார், M. சுசில்குமார் சல்லானி, G. சுனில் குமார் போத்ரா, Dr.M. பிரேமா, L. சூரப் முனோட், N. தில்லை சீனு மற்றும் G.P. விஜயபாலன், P. சஞ்சீவ்குமார் பொருளாளர் R. அருள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் நகர்மன்ற துணை தலைவர் M. முத்துகுமார் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துறை வழங்கினார்கள்.
சிதம்பரம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் பேராசிரியர்கள் கல்யாணராமன், ஸ்ரீராம், ஜெயராஜ் சக்திவேல் மூத்த உறுப்பினர் முன்னாள் தலைவர் T. ஜெயராமன் மற்றும் ரோட்டரி மிட் டவுன் சங்கத்தின் செயலாளர் K. நடராஜன் மற்றும் கொள்ளிடம் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஷாஜகான் மற்றும் குமார் உட்பட கலந்து கொண்டனர். மேலும் சீர்காழி ரோட்டரி சங்கத்தின் வருங்கால செயலாளர் ராஜீக், பொருளாளர் முகமது நாசர் மற்றும் பொறியாளர் சங்கரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் முனைவர். G. ஆறுமுகம் நன்றி கூற மருத்துவ முகாம் இனிதே நடைபெற்று முடிந்தது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி