தமிழ்நாட்டில் வரும் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் வெப்பம் கொளுத்தி வந்த நிலையில் கோடைமழை வந்து மக்களை மகிழ்வித்தது. இதனையடுத்து வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வினால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது. அதனையடுத்து கத்திரி வெயில் முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று கேரளாவில் பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் ஜூன் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூன் 3 ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.