0 0
Read Time:3 Minute, 27 Second

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாலையிலேயே வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சியின் முகவர்கள் குவிந்துள்ளனர்.

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை சரியாக 8மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். முதலாவதாக தபால் வாக்கு எண்ணப்படும். மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா. ஒடிசா போன்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதேபோல தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் நடைபெற்ற விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு தேர்தல் செய்தி தொடர்பாளர்கள் மற்றும் தகவல் அறிவிப்பு பலகையின் மூலம் வாக்கு எண்ணிக்கை குறித்து அறிவிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. சரியாக இன்று காலை 8.00 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கும். EVM இயந்திரத்தின் மூலம் வாக்கு எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கும்.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து சீல் வைக்கப்பட்ட அறைகளும் நாளை காலை 8.00 மணிக்கு திறக்கப்படும். தபால் வாக்குகள் அதிகமாக உள்ள இடத்தில் மட்டும் EVM இயந்திரம் மூலம் வாக்கு எண்ணும் பணி 9.00 மணிக்கு நடைபெறும்.

தபால் வாக்குகள் அதிகமாக உள்ள பகுதி

சோழிங்கநல்லூர் – 30 (கவுண்டிங் டேபிள்)
கவுண்டம்பாளையம் – 20
(கோயம்புத்தூர்) பல்லடம் – 18

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதிகாலையிலேயே வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சியின் முகவர்கள் குவிந்துள்ளனர். அவர்களை சோதனை செய்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %