0 0
Read Time:2 Minute, 42 Second

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சுமார் 290-க்கும் அதிகமான இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி கட்சிகள் 230-க்கும் அதிகமான இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பின்னடவைச் சந்தித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகிக்கிறார். அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின் நடிக்கும் மிகப்பெரிய தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில், அண்ணாமலைக்கு செல்வாக்கு நிறைந்த பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்திலேயே பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

குறிப்பாக அண்ணாமலையின் சொந்த ஊரான கரூரில் உள்ள தொகுதியில் பாஜக வேட்பாளர் 3-வது இடத்துக்கு பின்னோக்கிச் சென்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 38 ஆயிரத்து 103 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். அதிமுகவின் தங்கவேல், 31 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் செந்தில்நாதன் வெறும் 7039 வாக்குகளே பெற்றிருக்கிறார். அண்ணாமலை தான் போட்டியிட்ட கோவை தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். தேர்தல் நிலவரங்களை பார்க்கும்போது, அண்ணாமலையால் பாஜக கட்சிக்கு எந்தவொரு பலனும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %