2 0
Read Time:4 Minute, 26 Second

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்று முடிவிலும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார்.

இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜுன் 4 -ம் தேதியான இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தொகுதி விபரம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 – மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 – கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 11 சுற்று முடிவில் 2,76,347 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். தொடர்ந்து அனைத்து சுற்று முடிவிலும் இவரே முன்னிலை பெற்று வருகிறார். அதிமுக 1,26,228 வாக்குகளும், பா.ம.க 92,862 வாக்குகளும், நா.த.க 65404 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 1,50,119 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இது தொடரும் பட்சத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவின் வெற்றி உறுதியாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %