0 0
Read Time:1 Minute, 27 Second

நாட்டு மக்கள் மீதான அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் என ராகுல்காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு, ரேபேலி தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சி என இவரது பணிகள் தொடர்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் நாட்டு மக்கள் மீதான உங்களது அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடைய வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர் ராகுல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %