0 0
Read Time:3 Minute, 54 Second

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடைபெறும் போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். சென்னையில் ஜெயக்குமார், கோவையில் செல்லூர் ராஜு பங்கேர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரத்தை கண்டித்து சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்,மாதவச்சேரி,சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விஷ சாராயம் அருந்தியதால் இதுவரை 58 நபர்கள் உயிரிழந்து உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்தும் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அதிமுக வலியுறுத்துவதாகவும் மேலும் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக அதிமுக சார்பில் நாளை தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்தும் தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.இதில் முன்னாள் அமைச்சர் மோகன்,கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %