குமராட்சி கடைவீதியில் சமுதாய கழிவறை கட்டிட திறப்பு விழா தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது
குமராட்சி கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன குறிப்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அரசுமேல்நிலைப்பள்ளி காவல் நிலையம் தீயணைப்பு நிலையம் சார் பதிவாளர் அலுவலகம் தபால் நிலையம் கூட்டுறவு வங்கி தனியார் வங்கிகள் கடைவீதியில் உள்ள வர்த்தகங்கள் என தினமும் 57 ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து தலைவர்களும் ஒன்றிய கவுன்சிலர்களும் 200க்கும் மேற்பட்ட உள் கிராம மக்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் பணிக்கு வரும் அரசு அலுவலர்களும் அவரவர் வேலைக்காக குமராட்சி கடை வீதியில் அனு தினமும் ஆயிரம் கணக்கானோர் வந்து செல்கின்றனர் இவர்களுக்கு உபாதைகளை கழிப்பதற்கு கழிவறை இல்லாததால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருந்தனர்.
இது சம்பந்தமாக குமராட்சி வர்த்தக சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் குமராட்சி ஊராட்சி தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணனிடம் கடைவீதியில் பொது கழிவறை வேண்டி கோரிக்கை வைத்தனர் தலைவர் தமிழ்வாணன் மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைத்து அனைத்திந்திய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 5,75000 ரூபாய் அஞ்சு லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் ஊராட்சித் துணைத் தலைவர் உமாமகேஸ்வரி வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன் வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல்பாசித் ஊராட்சி செயலர் சிலம்பரசன் வார்டு உறுப்பினர்கள் ராஜமலையசிம்மன் மணிகண்டன் இளையராஜா ராஜலட்சுமி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் இளஞ்செழியன் சக்தி விஜயகுமார் ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர் வந்திருந்த அனைவரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி