சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் டிரஸ்ட், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கத்தலைவர் எம். இ. மணியன் தலைமை வகித்தார். மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் டிரஸ்ட் எம். தீபக்குமார் ஜெயின் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் எஸ். மகேஷ் வரவேற்றார். சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் முகாமைத் துவக்கி வைத்து பேசினார். லயன்ஸ் மாவட்டத் தலைவர் சண்முகம், ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியன், கே.விஜய குமார் தாலேடா, ஏ. ராமச்சந்திரன், கே. ரவிச்சந்திரன், எம். பாண்டியன், எம். லலித்குமார் ஜெயின், சி. சமுத்திரராஜகுமார், மணிகண்டன், கமல் குமார் போத்ரா, கதிரவன், விஷால், பிரபாகரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
முகாமில் 333 பயனாளிகள் பங்கேற்று இலவச கண் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனைகளும் பெற்றனர். 104 பேர் கண் புரை அறுவைசிகிச்சைக்குப் பரிந்துரைக்கப் பட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். சங்க பொருளாளர் எஸ். சைலேஷ் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி