ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்த பாஜக நிர்வாகி அஞ்சல்தலையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் படுகாயமடைந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுஆனால் அவர் சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 11 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தப்பியோடிய கைதி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் போலீஸ் காவல் முடிந்து பத்து பேரை நேற்று பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைத்தனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்த நிலையில் இந்த சம்பவத்தில் பெண் வக்கீல் மலர்கொடி உட்பட மேலும் மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை பாஜக மகளிர் அணி துணை செயலாளர் அஞ்சலையை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகியான அஞ்சலை, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததோடு, உளவு பார்க்கும் வேலையிலும் அஞ்சலை ஈடுபட்டுள்ளார். இந்த தொடர்பின் அடிப்படையில் அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.