ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகி அஞ்சலையை கட்சியிலிருந்து நீக்கம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை பாஜக மகளிர் அணி துணை செயலாளர் அஞ்சலையை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகியான அஞ்சலை, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததோடு, உளவு பார்க்கும் வேலையிலும் அஞ்சலை ஈடுபட்டுள்ளார். இந்த தொடர்பின் அடிப்படையில் அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா மகளிரணி செயலாளர் அஞ்சலை (47) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலையை கட்சியில் இருந்து நீக்கம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வந்த அஞ்சலை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது..