0 0
Read Time:3 Minute, 3 Second

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல், கட்டுமான பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த கொலை வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கினர். பிரபல ரவுடியாக இருந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை கொலை நடந்த அன்றைய இரவே போலீசார் கைது செய்தனர்.

அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் ‘என்கவுண்ட்டரில்’ போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனிடையே மற்ற 10 கொலையாளிகளும், போலீஸ் காவல் முடிந்து, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கொலையில் தொடர்புடையதாக தேடப்படும் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியான அஞ்சலை தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் எழும்பூர் பகுதியில் இன்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அரசியல் கட்சி தொண்டர்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %