0 0
Read Time:2 Minute, 11 Second

சென்னையில் குப்பை தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லஸை கண்டுப்பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை நேரில் சந்தித்து பாராட்டிய மேயர் பிரியா, ஊக்கத்தொகையும் வழங்கினார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்பவர் தனது ஐந்து லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸை தொலைத்துள்ளார். வீடு சுத்தம் செய்தபோது குப்பையுடன் வெளியிருக்க கூடும் என்ற சந்தேகத்தில், தெருவில் தூய்மைப் பணி செய்யும் பணியாளர்களின் உதவியை நாடியுள்ளார்.

தெருவில் வைக்கப்பட்டிருந்த பொது குப்பைத்தொட்டி முழுவதும் தேடி வைர நெக்லஸை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார். தூய்மை பணியாளர் அந்தோணிசாமியின் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டைப் பெற்றது. அந்தோணிசாமியின் நேர்மையை பாராட்டும் வகையில் மேயர் பிரியா அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

செய்யும் தொழிலை காதலித்து உண்மையாக செய்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் எனவும் பொதுமக்கள் தங்களது வீட்டின் குப்பைகளை மொத்தமாக கொட்டி செல்லாமல் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கினால் விலைஉயர்த்த பொருட்கள் தொலையாது எனவும் தூய்மைப் பணியாளர்களின் பணி எளிமையாக இருக்கும் எனவும் அந்தோணிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %