சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணியளவில் தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் மற்றும் இணை தாளாளர் ஏ.ரூபியால் ராணி ஆகியோர் தலைமை தாங்கினர். கமாண்டிங் ஆபிசர் கர்னல் வாசுதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
உடன் அண்ணாமலை நகர் 4TN(CTC) NCC ஆபிசர் சப் பைனஸ், இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி முன்னாள் கணித ஆசிரியர் சுந்தரலிங்கம், வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை கல்வி அதிகாரி எஸ்.பாலதண்டாயுதபாணி மற்றும் அதினா குளோபல் பள்ளி அசோஸியேட் NCC ஆபிசர் பழனியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முன்னதாக தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசிய மாணவர் படை கொடியை கர்னல் வாசுதேவன் ஏற்றினார். பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் மற்றும் பள்ளியின் முதல்வர் நரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
தேசிய மாணவர் படை வீரர் ஒருவருக்கு கர்னல் வாசுதேவன் அவர்கள் பரே அணிவித்தும்,மற்ற மாணவர்களுக்கு அந்தந்த மாணவர்களின் பெற்றோர்களே பரே அணிவித்தும் பதவியேற்றுக் கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினர்கள் மாணவர் படை வீரர்களின் குறிக்கோள் மற்றும் நோக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.
பள்ளியின் தாளாரளர் எஸ்.குமார் அவர்கள் இனிவரும் நாட்களிலும் தேசிய மாணவர் படை சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். பள்ளியின் முதல்வர் நரேந்திரன் மற்றும் நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் போனிகலா ஆகியோர் விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.பள்ளியின் NCC ஆசிரியர் ரஞ்சித் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். பின்னர், தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி