0 0
Read Time:2 Minute, 46 Second

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கடந்த ஜூலை 5 -ஆம் தேதி ரௌடிக் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடா்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அவா்கள் அனைவரும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பொன்னை பாலு உள்ளிட்ட பலரை ஏற்கனவே போலீசாா் காவலில் எடுத்து விசாரித்தனா். இந்த விசாரணையை தொடா்ந்து கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த கொலை வழக்கின் விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்கள் அடிப்படையில் பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் காவல் ஆய்வாளா் எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்னை பாலு உள்ளிட்ட 5 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் வேலூர் சிறையில் உள்ளவரும், பிரபல ரெளடியுமான நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். போலீஸ் காவலில் உள்ள அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியான அஸ்வத்தாமனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதன் தலைவர் லெனின் பிரசாத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %