சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.. சீனிவாச சாஸ்த்திரி அரங்கின் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் இரா.சிங்காரவேல் உறுதிமொழியை வாசித்தாா்.
இதில் பல்கலைக்கழக புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள், துணை இயக்குநா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனா்.
சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
பின்னா், மாணவா்கள் அனைவரும் பள்ளி வளாகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனா். . கல்லுாரியில்…காட்டுமன்னாா்கோவில் எம்ஜிஆா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, அக்கல்லூரியின் முதல்வா் மீனா தலைமை வகித்தாா். கல்லூரியின் போதைப் பொருள் தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஆா்.சரவணன் வரவேற்றாா்.
இதில், மாணவா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து, காட்டுமன்னாா்கோவில் காவல் உதவி ஆய்வாளா்கள் மணிகண்டன், இளங்கோ ஆகியோா் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.