1
0
Read Time:1 Minute, 12 Second
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 78 வது சுதந்திர தினம் சீர்காழி கிங்ஸ் நர்சிங் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக விழுதுகள் இயக்கத்தின் தலைவர் Er ஏ.கே.ஷரவணன் கலந்து கொண்டு கொடி ஏற்றினார்.
கல்லூரி முதல்வர் அரசி வரவேற்றார்.கல்லூரி தாளாளர் ஜான் விக்டர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் ஏராளமான மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிழச்சி ஏற்பாடுகளை கிங்ஸ் நர்சிங் கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்