0 0
Read Time:2 Minute, 28 Second

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்து விட்டது. உயிர்ச்சேதமும் 377 ஆக அதிகரித்தது. கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.இந்நிலையில் கொரோனாவுக்கு முன் கள பணியாளர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதோடு உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றனர். அதன்படி கடலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்த அரங்கநாயகம்  என்பவர் கடந்த ஒரு வாரமாக கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாகன டிரைவராக இருந்து வந்தார்.

அவருக்கு திடீரென காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு ஏற்பட்டது. இதைய டுத்து அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனை என பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு நோய் குணமடையவில்லை.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 இது பற்றி தகவல் அறிந்ததும் அவருடன் பணியாற்றி வந்த சக போலீசார் அதிர் ச்சி அடைந்தனர். அவரது இழப்பு போலீசாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிருபர்: அருள்மணி, கடலூர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %