0 0
Read Time:2 Minute, 0 Second

தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னாலும் சரி இந்த கொடியை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்.


புயலுக்குப் பின் அமைதி மாதிரி, நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது. நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கும் அந்த நாளில், நம்முடைய கொள்கைகள், செயல்திட்டங்களுடன் இந்த கொடிக்கான விளக்கமும் சொல்லப்படும். அதுவரைக்கும் சந்தோசமா, மாஸா, கெத்தா நம்ம கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம்.
இது வெறும் கட்சிக் கொடி மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன். நான் சொல்லாமலேயே இந்த கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நீங்கள் ஏற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %