0 0
Read Time:4 Minute, 57 Second

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்குச் சொந்தமான வானவெடி தயாரிக்கும் குடோன் அதே பகுதியில் இரும்பு சீட் கொண்ட தகரக் கொட்டகையில் அமைந்துள்ளது. இங்கு நாட்டு வெடிகள், திருமணத்திற்குத் தேவையான வானவெடிகள் ஆகியன தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்னும் 2 மாதங்களில் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, வானவெடிகள் தயாரிக்கும் பணி அங்கு மும்முரமாக நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று இந்த குடோனில் வெடி தயாரிக்கும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாரா விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட திருவாவடுதுறையைச் சேர்ந்த கர்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

இன்னும் 2 மாதங்களில் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, வானவெடிகள் தயாரிக்கும் பணி அங்கு மும்முரமாக நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று இந்த குடோனில் வெடி தயாரிக்கும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாரா விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட திருவாவடுதுறையைச் சேர்ந்த கர்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

மேலும், கலியபெருமாள், லெட்சுமணன், குமார் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். குத்தாலம் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களில் படுகாயமடைந்த லட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை எஸ்.பி ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை ஆகியோரும் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவரும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார். தற்போதைய நிலையில், 2 பேர் பலியான நிலையில் மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருவாலங்காடு பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மேலும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %