0 0
Read Time:2 Minute, 23 Second

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் காந்திசிலை அருகே பேரணியை தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சையது அசினா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் காந்திசிலை மற்றும் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பேரணி தொடங்கி எஸ்.பி.கோயில்தெரு, போல் நாராயணன் தெரு, மாலைகட்டித்தெரு, உமையாள்சந்து வழியாக கீழரதவீதியில் உள்ள காமராஜர் சிலையை அடைந்தது. பேரணி முடிவில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பீவி முன்னிலை வகித்தார்.

பேரணியில் மகிளா காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம், கடலூர் மேற்கு மாவட்ட தலைவி லாவண்யா, மத்திய மாவட்ட தலைவி புஷ்பா, வேலூர் மாவட்ட தலைவி கோமதி, மாநில துணைத் தலைவர் எஸ்.செந்தில்குமார், மாநில செயலாளர் வழக்குரைஞர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை ஜகந்நாதன், தலைமைக்கழக பேச்சாளர் மோகன்தாஸ், தேர்தல் பொறுப்பாளர் திருமாறன், மாவட்ட சிறுபான்மை பிரிவு ஷாஜகான், மாவட்ட மீனவரணி கடல்கார்த்திகேயன், நிர்வாகிகள் தமிழரசன், பழனிசாமி, இணையதுல்லா, இளைஞர் காங்கிரஸ் ராஜீவ்காந்தி, அன்பழகன், தில்லைராஜா, சித்தார்த்தன், குமாரவேல், பிரபு, இன்பராஜ், ஷாகில்அகமது, உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %