கடலூர்: கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் இரவு பகல் பாராது பணி செய்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான.தி. வேல்முருகன் பண்ருட்டி வட்டார அரசு தலைமை மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். கொடிய கொரோனா காலத்தில் பண்ருட்டி தலைமை அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை குறித்தும் அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்த தோடு அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிடமும் அங்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு உடனடியாக தேவைப்படும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், தளவாடங்கள்,கட்டமைப்பு வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டதோடு இப்பேரிடர் காலத்தில் சேவை நோக்கோடு மக்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நிருபர்: அருள்மணி, கடலூர்.