தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி. சேகர் தலைமை தாங்கினார். ஆர். இராமச்சந்திரன் கு.நடராஜன் ஏ.சந்திரமௌலி ஆர். மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பி. முத்துக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முன்னதாக சின்ன செட்டி தெரு மற்றும் அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் வளாகம் ஆகிய இடங்களில் எம்.எஸ்.ஆர்.ரவி மற்றும் டாக்டர் ஏ. சந்திரமௌலி ஆகியோர் விஸ்வகர்ம சமூக ஐவண்ண அனுமன் கொடியை ஏற்றி வைத்தனர்.
அண்மையில் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விஸ்வகர்மா யோஜனா திட்டம் பற்றி கூறும் போது உளி சுத்தியல் சிறிய அளவு வெப்பன்(சிறு ஆயுதம்) வைத்து வேலை செய்யும் 18 வகை தொழிலாளர்களும் விஸ்வகர்மாக்கள்தான் என்று கூறிய மாறுபட்ட கருத்தை இந்தியாவில் வாழுகின்ற அனைத்து விஸ்வகர்மா சமூக மக்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.உண்மைக்கு புறம்பான தகவலை தந்த மத்திய நிதி அமைச்சர் வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய சங்க மாநில தலைவர் ஜி.. சேகர் விஸ்வகர்மாவை பற்றி ரிக் வேதத்திலும் மகாபாரதம் ஹரிவம்சம் மற்றும் வாயு புராணம் நான்காம் அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ளது. விஸ்வகர்மாவுக்கு புதல்வர் ஐவர் அவர்கள் முறையே மனு(கொல்லர்) மயா(தச்சர்)துவஸ்டா(கண்ணார்-பாத்திரவேலை செய்பவர்) சில்பி (சிற்ப வேலை செய்பவர்)விஸ்வக்ஞர்(பொற்கொல்லர்) இவைகள் வரலாற்று உண்மைகள். வரலாற்றை திரித்து கூறிய மத்திய நிதியமைச்சர் வேதங்களையும் இதிகாசங்களையும் ஆராய்ந்து தன் கருத்தை திரும்ப பெற வேண்டும்.விஸ்வர்ம சமூகத்தை பெருமை படுத்தத்தான் மாண்புமிகு பாரத பிரதமர் இத்திட்டத்தை அறிவித்தார் என்று பெருமை பட்டோம் ஆனால் விஸ்வகர்மா சமூகத்தையும் விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்களையும்கேவலப்படுத்தும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பெயரை மாற்றி அமைத்து இந்திய கலாச்சாரத்தின் வேர்களாக இருக்கும் விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்களின் கௌரவத்தை மாண்புமிகு பிரதமர் மோடி ஜி அவர்கள் காப்பாற்ற வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.பாலசுப்பிரமணியன் எம்.சுரேஷ் எம்.திருஞானசம்பந்தம் ஆர்.கனகசபை ஜி.சாமிநாதன் ஆர்.உமாபதி ஜி.முருகன் ஆர்.தில்லைநடராஜன் ஜி.சிவக்குமார் ஆர்.சேகர் என்.வினோத்குமார் ஆர்.சிவா ஆர். தங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவில் இளைஞர் அணி துணை செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி