ராகுல் காந்தியை விமர்சனம் செய்த எச் ராஜா வை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில்
காவல் நிலையத்தில் புகார்!
தமிழ்நாடு பாஜக பொறுப்புக் குழு தலைவர் எச். ராஜா மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு ராகுல் காந்தியை தேசதுரோகி என்று மிக மிக இழிவாக தரம் தாழ்ந்தி பேசியதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் எனவே எச் ராஜா மீது வழக்கு தொடுத்து கைது செய்ய கோரி சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை அதிகாரி
லா மேக்கை நேரில் சந்தித்து
சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை ஆர். மக்கின் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.ஏன் ராதா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவரும் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளருமான ராஜா. சம்பத் குமார் பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன் நகர காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் தில்லை.கோ. குமார் மாவட்ட செயலாளர் தில்லைச்செல்வி அண்ணாமலைநகர் நகர தலைவர் சக்திவேல் லாரன்ஸ் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜம்மு காஷ்மீர் அரியானா போன்ற மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னணி தலைவர்களின் ஒருவரான ராகுல் காந்தியின் பாதுகாப்பை சீர் கெடுக்கின்ற வகையில் இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில்சட்ட ஒழுங்கு பாதிக்க கூடிய அளவில் எச் ராஜா பேசி வருவது கண்டனத்துக்குரியது.
மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு ராகுல் காந்தியை தேசதுரோகி என்று மிக மிக இழிவாக தரம் தாழ்ந்தி தமிழ்நாடு பாஜக பொறுப்புக் குழு தலைவர் எச். ராஜா பேசியதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்.
ராகுல் காந்தியை ஜனநாயகத்துக்கு விரோதமாக அரசியல் சட்டத்தை மதிக்காமல்
எச் ராஜா விமர்சனம் செய்வதற்கு தடைவிதித்து எச் ராஜா மீது பி.என்.எஸ்.இன்351,
352,353,61 அரசியல் சட்டத்தின் படி வழக்கு தொடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி