பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உலகதூய்மை தின விழா நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். சுற்றுலா மைய மேலாளர் பைசல்அகமது வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் சப் – கலெக்டர் ராஷ்மி ராணி கலந்துகொண்டு பிச்சாவரம் வளாகம் மற்றும் மாங்குரோவ் காடு பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி பணியை தொடங்கி வைத்தார். இதில் கடலூர் கூடுதல் கலெக்டர் ஆகாஷ் கலந்து கொண்டு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். தொடர்ந்து மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், பரங்கிப்பேட்டை அண்ணாமலை பல்கலைக்கழக உயிரின உயர் ஆராய்ச்சி மையத்தின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பைகளை அகற்றி னார்கள். நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக உயிரியல் உயர் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ராமநாதன், பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்வராஜ், பிச்சாவரம் சுற்றுலா மையத்தின் கணக்கர் செல்வம், படகு ஓட்டும் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி