0 0
Read Time:2 Minute, 30 Second

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழுப்பு மகளிர் மாநாடு இன்று மாலை உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், விழுப்புர நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்த மாநாட்டில் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாடு நடைபெற உள்ள இடத்தில் பிரமாண்டமான முறையில் மாநாடு முகப்புகள், பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் இந்த மாநாடு பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சீருடையுடன் பங்கேற்க உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %