சிதம்பரம்: அமிர்தாலயா நுண்கலை அகாடமி மற்றும் ஆருத்ராலயா அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் விருது வழங்கும் விழா
விருது வழங்கும் விழாவை அமிர்தாலையா நுண்கலை அகாடமி நிறுவனரும் ஆருத்ராலயா அறக்கட்டளை செயலாளரும் நா.பாரதி சிதம்பரம் கோதண்டராமன் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக T.A.J.லாமேக் துணை காவல் கண்காணிப்பாளர் சிதம்பரம் மற்றும் K.விமலா மோட்டார் வாகன ஆய்வாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சிதம்பரம். .மேலும் R. வெங்கடேஷ் தலைமை ஆசிரியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி கடலூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் பங்குபெற்ற 65 மாணவர்களுக்கு இளங்கலைசுடர் விருதும் மற்ற 126 மாணவர்களுக்கு பங்கு பெற்ற சான்றிதழ்களும் பதக்கங்களும் , வழங்கப்பட்டது.
முக்கிய விருதாக செல்வி . அமிர்த லோஜினி (வயது5) அவர்களுக்கு இளம் சேவைச் சுடர் விருது வழங்கப்பட்டது.இவர் வயநாட்டில் ஏற்பட்ட பேரிடருக்காக பரதநாட்டிய நிகழ்ச்சி செய்து அதன் மூலம் வந்த நிதியை கடலூர் மாவட்ட ஆட்சியர்,சிபி ஆதித்யா செந்தில் குமார் அவர்களிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கலை சார்ந்த மாணவர்களை ஊக்குவிக்கும் குருவிற்கு கலைச் செம்மல் விருதும்,பிற கலை நிறுவனங்களுக்கு கலை குருகுலம் விருதும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பல துறையை சார்ந்த கலைஞர்களும் குழந்தைகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.