சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் பள்ளியின் பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் ம.பிரதாப் வரவேற்புரை நல்கினார்,ஆசிரியர் சங்க செயலாளர் கே.ஏ. சம்பத்குமார், நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் மா.கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் வெ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்,சிறப்பு விருந்தினராக சங்கத்தின் சாசனத் தலைவர் பி. முஹம்மது யாசின், சாசனச் செயலாளர் எம்.தீபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி மாணவிகளுக்கு, போலியோ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் மேலும் போலியோ நோயின் பாதிப்புகளை பற்றியும், போலியோ நோயை தடுப்பதற்காக ரோட்டரி சங்கங்கள் செய்து வரும் சேவைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்கள், பள்ளி வளாகத்தில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது, இந்நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏ.ராஜா,எம். தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர், நன்றியுரை தேசிய நல்லாசிரியரும் சங்கத்தின் செயலாளருமான சி. ஏகாம்பரம் கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி