0 0
Read Time:5 Minute, 3 Second

சமீபத்தில், தமிழகத்தின் துணை முதலமைச்சராக பணியமர்த்தப்பட்டவர், உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சராகவும் பொருப்பில் உள்ள அவர், நடிகர் அஜித்குமாருக்காக வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் அஜித் குமார், கார் ரேஸிங், பைக் ரேஸிங் உள்ளிட்ட விஷயங்களிலும் ஆர்வம் மிக்கவர். ஷூட்டிங் இருந்தாலும், இல்லை என்றாலும் தனது பைக்கை எடுத்துக்கொண்டு பயணம் செய்யும் இவர், சில மாதங்களுக்கு முன்புதான் தனது இந்தியா பயணத்தை நிறைவு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, நடிகர் அஜித் ஐரோப்பா ஜி டி ரக கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். துபாயில் நடைபெற இருக்கும் இந்த கார் பந்தையத்திற்கான பயிற்சியில் தற்போது அஜித்குமார் ஈடுப்பட்டு வருகிறார். அது குறித்த வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது.

நடிகர் அஜித்குமார், கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி அவருக்கு வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், “24H Dubai 2025 கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும் நண்பருமான அஜித் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என பதிவிட்டிருக்கிறார்.

தொடர்ந்து, SportsTN (SDAT) logo-வை அஜித்குமார் ரேசிங் யுனிட்டின் கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அற்றிந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் formula 4 கார் பந்தயம் நடைப்பெற்றது. இது குறித்த தமிழக அரசின் முன்னெடுப்புகளுக்கு, வாழ்த்து தெரிவித்த அஜித்திற்கு அன்பும் நன்றியும் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“கார்பந்தய போட்டியில் வென்று, தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்” என்றும் உதயநிதி த் அனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய்க்கும் வாழ்த்து..

தமிழ் திரையுலகில் பெரிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியை தொடங்கியதில் இருந்து, அரசியல்வாதியாகவும் உருவெடுத்திருக்கிறார். தனது கடைசி படமான ‘தளபதி 69’-ல் நடித்து முடித்து விட்டு, முழு நேர அரசியலில் இறங்க இருக்கும் இவர், சமீபத்தில் தனது முதல் மாநாட்டை விக்கரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த மாநாட்டிற்காக விஜய்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்துகளும் தெரிவித்திருந்தார்.

மாநாட்டில் விஜய்யின் பேச்சும், கொள்கைகளும் மக்களை மட்டுமன்றி சில அரசியல் பிரபலங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விஜய், தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுகவையும், தேசிய அளவில் பெரிய கட்சியான பாஜக-வையும் நேரடியாகவே பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.

விஜய்யின் விமர்சனம் குறித்து, உதயநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஏற்கனவே அமைச்சர் ஆர்.எஸ் பாரதி பதிலளித்து விட்டதாக கூறிய உதயநிதி, தனக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்தார். முன்னர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “திமுக ஆலமரம் போன்றது, அது விமர்சனங்களை எதிர்கொள்ளும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *