2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையும், 2027ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேதிகள் குறித்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், போட்டியின் அட்டவணைகளை கடைசி நேரத்தில் பிசிசிஐ அதிகாரிகள் வெளியிடுவதை தவிர்க்கவே அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவில் நாளை மறுநாள் (நவ. 24) முதல் இரண்டு நாள்களுக்கு ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெறுகிறது. மொத்தம் 574 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ள பெயர்களை அளித்துள்ளனர். பாகிஸ்தானை தவிர மற்ற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஐபிஎலில் விளையாட தங்கள் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளனர்.
IPL 2025 Start Date: These days the excitement of IPL 2025 mega auction is at its peak, meanwhile the date of starting IPL 2025 has come out. According to a media report, the dates of the next three seasons have been revealed. The 2025 season will be played from March 14 to May 25, the next season will start on March 15 and the final will be played on May 31. Apart from this, the date of IPL 2027 has also been revealed, which will start on March 14 and run till May 30.
According to a report by ESPN Cricinfo, all the franchises were informed about the dates of starting the next three seasons through e-mail. Official confirmation can be made on these dates very soon. Like the last three seasons, a total of 74 matches will be played in the IPL 2025 season. This can increase the number of matches in the next seasons. IPL 2026 may have 84 matches and the number of matches may increase to 94 in the 2027 season. The reason for increasing the number of matches may be media rights. If we recall IPL 2024, this tournament started on 22 March and lasted till 26 May, in the final of which KKR defeated Sunrisers Hyderabad.