0
0
Read Time:1 Minute, 8 Second
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில், கடலூரில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி வேண்டுகோளின் அடிப்படையில் சங்கத்தின் சார்பில் ரூபாய்12000 மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் ரவா பாக்கெட்டுகள் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலகத்தில்,வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.எம்.சுதா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, இந்நிகழ்வில் சங்கத்தின் சாசனச் செயலாளர் எம். தீபக்குமார், முன்னாள் தலைவர் கோ.சீனுவாசன், சங்கத்தின் தலைவர் வெ.ரவிச்சந்திரன், செயலாளர் சி.ஏகாம்பரம், பொருளாளர் பி.சஞ்சீவ் குமார், சி.புத்தநேசன் ஆகிய கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி