0
0
Read Time:1 Minute, 2 Second
பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்விராமஜெயம் தலைமை தாங்கினார் அவைத்தலைவர் குமார் இணை செயலாளர் ரங்கம்மாள் அவைத் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் இந்நிகழ்ச்சியை பேரூராட்சி மன்ற கவுன்சிலர் இந்துமதி சந்தர் ஏற்பாடு செய்தார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி