ஸ்ரீ நந்தனார் கல்வி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நந்தனார் கல்வி கழகத்தின் மூத்த உறுப்பினர் டி ரத்தினசாமி தலைமை தாங்கினார்.
மூத்த ஆலோசகர் டாக்டர்.Aசங்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவோடு ஸ்ரீ நந்தனார் கல்வி கழகத்தின் தலைவராக டாக்டர் கே. ஐ. மணிரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து செயலாளராக வி. திருவாசகம் பொருளாளராக டி. ஜெயச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் டிரஸ்ட் செயலாளர் டி கே எம் வினோபா டிரஸ்ட்.பொருளாலர் P.பன்னீர்செல்வம் கல்வி கழக உறுப்பினர்கள் இளைய. அன்பழகன் கொத்த வாசல்.k அன்பழகன் தங்க.பாஸ்கரன் ஆர். ரங்கநாதன் பி. கற்பனைச் செல்வம் எஸ். பி.திலகவதி ஜி. மணிவேல் பேராசிரியர். தெய்வநாயகம் Tசின்னத்துரை வ.க. செல்லப்பன் P.வாஞ்சிநாதன் கே. இளையராஜா ஆர். பாலையா K விஸ்வநாதன் ஆர். நெடுஞ்செழியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக நந்தனார் கல்வி கழக உறுப்பினர் தங்க. பாஸ்கரன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி