அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 78 -வது பிறந்த நாளை யொட்டி சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் மகளிர் அணி சார்பில் 500 பேருக்கு அன்னதானம் நலத்திட்ட உதவிகள்மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி அறிவுறுத்தலின் பேரில்
சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் மகளிர் அணி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு
சிதம்பரம் மேல வீதியில் உள்ள சிறைமீட்ட விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக அர்ச்சனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு . சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர் மன்ற உறுப்பினருமான தில்லை ஆர்.மக்கின் தலைமை வகித்தார். மகளிர் அணி தலைவர் அஞ்சம்மாள் வரவேற்றார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன் மாநில மாநில ஐஎன்டிசி பொதுச் செயலாளர் ஸ்டீபன் முத்துப்பாண்டி மாநில சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் சந்துரு மாவட்ட செயலாளர் ஆட்டோ டி குமார் மாவட்ட செயலாளர் தில்லை செல்வி வழக்கறிஞர் கம்சலா கண்ணையன் ராதா விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி. செந்தில்நாதன் கலந்து கொண்டு 500 பேருக்கு அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவர் சுந்தரராஜன் கீரப்பாளையம் வட்டாரத் தலைவர் செழியன் ஆகியோர் இனிப்பு வழங்கினர்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீமுஷ்னம் செல்வம் இளங்கோவன் சம்பதம் பேன்சி எஸ் எஸ் நடராஜன் சசிகுமார் கலை பிரிவு ஆசிரியர் கே.என். நாராயணசாமி மாவட்ட ஆர்.டி.ஐ துறை பொது செயலாளர் ஜெயச்சந்திரன் பால். கிருஷ்ணமூர்த்தி லாரன்ஸ் மீது குடி ரவி ஆடூர் சிவா கீரை. துரைமுருகன்
கஜேந்திரன் மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜனகம் ராதா அழகர் மாலா ருக்குமணி
உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் கலைப்பிரிவு மாவட்ட தலைவர் பொன். மாதவ சர்மா நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி