0 0
Read Time:3 Minute, 15 Second

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. பெங்களூரை தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகராக உருவாக்கியதில் முதன்மை பங்களித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. கர்நாடக அரசியலில் பல ஆண்டுகாலம் காங்கிரஸ் முகமாக இருந்தவர். கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் 1932-ம் ஆண்டு பிறந்த எஸ்.எம்.கிருஷ்ணா 1960களில் இறுதியில் இருந்தே தீவிர அரசியலில் களமாடியவர். நாடாளுமன்ற எம்பியாக பயணித்தவர். கர்நாடகா சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்தார். கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை இருந்தார். அப்போது காவிரி பிரச்னை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முதலமைச்சராக எஸ்.எம்.கிருஷ்ணா பதவி வகித்த காலத்தில் கர்நாடகா சினிமா சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி பதவி வகித்தார். மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்தார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கியது.

கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலன் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.எம்.கிருஷ்ணா, இன்று (டிச. 10) அதிகாலை 3 மணிக்கு பெங்களூரில் காலமானார். எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது மறைவுக்கு துக்கம் கடைபிடிக்கும் விதமாக கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (டிச. 11) கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *