சென்னை: கொரோனா வார் ரூமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம் (War Room) தொடங்கப்பட்டிருந்தது . இந்த மையத்திற்கு ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்தது தமிழக அரசு. இந்த குழு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளை கண்காணிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில்,இந்த வார் ரூமில் முதல்வர் ஸ்டாலின் நேற்று (14.05.2021) இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர்கள் வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார் முதல்வர்.கொரோனா கட்டளை மையத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகள் எவ்வாறு செயல்படுகிறது உள்ளிட்ட விவரங்களை முதல்வர் கேட்டறிந்தார் என தகவல்கள் தெரிவிக்கன்றன.
தமிழகத்தில் படுக்கைகள் – மருந்து கையிருப்பு – உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன்.#Covid19 கட்டுப்படுத்தலில் தமிழகத்தில் நிலவி வந்த
— M.K.Stalin (@mkstalin) May 14, 2021
குழப்பங்களை சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம். pic.twitter.com/0O2URuDTiv