0 0
Read Time:3 Minute, 1 Second

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் வெற்றிப் பெற்றார். இதன்மூலம் இளம் உலக செஸ் சாம்பியன் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். மேலும் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற 2வது தமிழக வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் ரஷ்யாவின் கேரி கேஸ்ப்ரோ 22 வயதில் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது 18 வயதே ஆன குகேஷ் உலக சாம்பியன் ஆகியுள்ளார்.

இந்நிலையில் குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“குகேஷின் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள். இது அவரின் திறமை, கடின உழைப்பு மற்றும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி, செஸ் வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டுகிறது. அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“18 வயதில் இளம் உலக செஸ் சாம்பியன் ஆனதற்கு குகேஷுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வெற்றி இந்தியாவின் மதிப்புமிக்க செஸ் பாரம்பரியத்தை தொடர்வதோடு, உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்கியதன் மூலம் உலக செஸ் தலைநகராக சென்னை இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

உன்னை நினைத்து தமிழ்நாடு பெருமை கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *