0 0
Read Time:1 Minute, 24 Second

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்.

அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் மறைவு இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 7 நாள்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால், இன்று (டிசம்பர் 27) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. அத்துடன் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெற உள்ளது. மன்மோகன் சிங் மறைவுக்கு இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *