0 0
Read Time:3 Minute, 15 Second

சிதம்பரம் நடராஜர்; தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சைவ வைணவ சமய ஒற்றுமை வலுப்பெற வேண்டி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் 108 அகல் விளக்கு ஏற்றி வழிபாடு!

சைவ வைணவ சமய ஒற்றுமை வலுப்பெற வேண்டி சிதம்பரம் நடராஜர் கோவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் 108-அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது .

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக சிதம்பரம் விளங்குகிறது. இந்த நடராஜர் ஆலயத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது இக்கோவில் அரியும் சிவனும் ஒன்று என்ற கோட்பாட்டில் கீழ் கட்டப்பட்டுள்ளது
ஒரே இடத்தில் இருந்து நடராஜப் பெருமானையும் தில்லை கோவிந்தராஜ பெருமானையும் ஒரே இடத்தில் இருந்து தரிசனம் செய்யலாம் அப்படி புகழ்பெற்ற ஸ்தலமாக சிதம்பரம் விளங்குகிறது.
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் 108 வைஷ்ணவ திவ்ய தேசத்தில் 40வது திவ்ய தேசமாகும்

சைவ வைணவ பாகுபாட்டால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லைகோவிந்தராஜ பெருமாளுக்கு பல நூறு ஆண்டு காலமாக பிரம்மோற்சவம் நடைபெறாமல் உள்ளது .எனவே பிரம்மோற்சவம் நடைபெற சைவ வைணவ சமய ஒற்றுமை வலுப்பெற வேண்டி தெய்வீக பக்தர் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம் என் ராதா தலைமையில் மாநில துணைத்தலைவர் ஆர் சம்பந்த மூர்த்தி பி. செல்வகுமார் மாநில பொதுச் ஏ.ராஜ சேகர் ரகோத்தமன் செந்தில்குமார் விக்னேஸ்வரன் பரணி ஸ்ரீராம் சமூக ஆர்வலர்கள் ஜெய ஷீலா மாநில பொதுக்குழு உறுப்பினர் குமராட்சி ரங்கநாதன் வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன் பாலகிருஷ்ணன் விஜயகுமார் முத்து இந்திரா தேவதாஸ் உள்ளிட்ட 100-க்கு மேற்பட்டோர் சிதம்பரம் கீழ சன்னதி உள்ள தெய்வீக பக்தர்கள் பேரவை அலுவலத்திலிருந்து ஊர்வலமாக சென்று கோவிந்தராஜ பெருமாள் எதிர்புறத்தில் உள்ள கொடிமரத்தின் அருகே இருக்கும் கருடாழ்வார் சாமி முன்பு 108 அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டு சிதம்பரம் நடராஜருக்கும் தில்லை கோவிந்தராஜுக்கும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *